விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக விவசாயிகளுக்கு வழங்கிய பணம் மீண்டும் அரசின் கணக்குக்கு மாற்றம்
விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக விவசாயிகளுக்கு வழங்கிய பணம், மீண்டும் அரசின் கணக்குக்கு மாற்றப்பட்டது. இதனால் விவசாயிகள் போரட்டத்தில் ஈடுபட்டனர்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் சகாபுரா தாலுகா சாகர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவப்பா. விவசாயி. இவர் விவசாயம் செய்வதற்காக சகாபுரா டவுனில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கடன் வாங்கி இருந்தார். இந்தநிலையில் கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி விவசாயக் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக விவசாயி சிவப்பாவின் வங்கி கணக்கில் ரூ.50 ஆயிரம் வரவு வைக்கப்பட்டது. ஒரு மாதம் கழித்து ரூ.43 ஆயிரம் வரவு வைக்கப்பட்டது.
இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான ஓரிரு நாட்களில் சிவப்பாவின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.93 ஆயிரம் மீண்டும் அரசின் வங்கி கணக்குக்கு மாற்றப்பட்டது. இதேபோல் அப்பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பணம் வரவு வைக்கப்பட்டு, பின்னர் அது அரசின் வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் அனைவரும் நேற்று காலை சகாபுரா டவுனில் உள்ள சம்பந்தப்பட்ட வங்கி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.