ராஜஸ்தானில் மருத்துவ கல்லூரி ஒன்றில் நோயாளியை டாக்டர் தாக்கும் வீடியோவால் பரபரப்பு
ராஜஸ்தானில் சவாய் மான்சிங் மருத்துவ கல்லூரியில் நோயாளி ஒருவரை டாக்டர் தாக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
ஜெய்பூர்,
ராஜஸ்தானின் ஜெய்பூர் நகரில் சவாய் மான்சிங் மருத்துவ கல்லூரி உள்ளது. இங்கு நோயாளிகள் பலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நோயாளியை டாக்டர் ஒருவர் திடீரென படுக்கை மீது ஏறி நின்று தாக்குகிறார். அவரை சுற்றிலும் பிற நோயாளிகள் படுக்கையில் இருந்தபடி இதனை அதிர்ச்சியுடன் கவனிக்கின்றனர்.
இதேபோன்று மற்ற நோயாளிகளின் உறவினர்களும் சுற்றி நின்று அமைதியாக வேடிக்கை பார்க்கின்றனர். இந்த நிலையில், அங்கு வந்த மற்ற டாக்டர்கள் தாக்குதல் நடத்திய டாக்டரை தடுத்து நிறுத்தி அவரை அமைதிப்படுத்தினர். இந்த சம்பவத்திற்கான காரணம் பற்றி உடனடியாக எதுவும் தெரியவரவில்லை. ஆனால் இதுபற்றிய வீடியோ வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
இதனை அடுத்து சம்பவம் பற்றி ராஜஸ்தான் மருத்துவ மற்றும் சுகாதார துறை மந்திரி ரகுசர்மா கூறும்பொழுது, இந்த வீடியோ பற்றிய அறிக்கை ஒன்றை நாங்கள் கேட்டுள்ளோம். உண்மையில் என்ன நடந்தது என்பது பற்றி அறிக்கை கிடைத்த பின்னரே தெரிய வரும் என்று கூறியுள்ளார்.