ஒரு தொகுதியை ராஜினாமா செய்தார் ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக்

ஒடிசாவில் 2 தொகுதிகளில் போட்டியிட்ட ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் ஒரு தொகுதியை ராஜினாமா செய்தார்.

Update: 2019-06-02 14:41 GMT
புவனேஷ்வர்,

ஒடிசாவில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் முதல்-மந்திரி நவீன் பட்நாயக் பீஜபூர் மற்றும் ஹின்ஜிலி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

இந்நிலையில் இன்று  2 தொகுதிகளில் பீஜபூர் தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஹின்ஜிலி தொகுதியின் எம்.எல்.ஏவாக மட்டும் நீடிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற  சட்டசபை தேர்தலில் ஆளுங்கட்சியான பிஜு ஜனதா தளம் மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் 112 தொகுதிகளில்  வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்