மத்தியபிரதேசத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்ட 2 அரசு ஊழியர்கள் சாவு

மத்தியபிரதேசத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்ட 2 அரசு ஊழியர்கள் உயிரிழந்தனர்.

Update: 2019-05-19 19:33 GMT
போபால்,

மத்தியபிரதேச மாநிலத்தில் வெவ்வேறு இடங்களில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த 2 அரசு ஊழியர்கள் உயிரிழந்தனர்.

தார் மக்களவை தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியில் நேற்று காலை பணியில் ஈடுபட்டிருந்த காருசிங் சோகாத் என்ற ஊழியர், இதய கோளாறு காரணமாக உயிரிழந்தார்.

டேவாஸ் தொகுதியில் வாக்குச்சாவடி தலைமை அதிகாரியாக பணியாற்றிய அனில் நேமா என்பவர் மாரடைப்பால் இறந்தார்.

மேலும் செய்திகள்