உத்தரபிரதேசத்தில் டிராக்டர் மீது பேருந்து மோதி விபத்து: 5 பேர் பலி
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே பேருந்தும் டிராக்டரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் உன்னோவ் பகுதியில் ஆக்ரா மற்றும் லக்னோ இடையிலான எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் டிராக்டரும் பேருந்தும் மோதிக்கொண்டதில் 5 பேர் உயிரிழந்தனர்.
பேருந்தில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அனைவரும் அங்குள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் பேருந்தும் டிராக்டரும் மோதி விபத்திற்குள்ளானதில் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.