நாதுராம் கோட்சே ஒரு கொலையாளி, பிரக்யாசிங்கிற்கு கண்டனம் - திக்விஜய் சிங்

நாதுராம் கோட்சே ஒரு கொலையாளி, அவரை போற்றுவது தேசபக்தியல்ல என்று பிரக்யாசிங் கூறிய கருத்திற்கு போபால் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திக்விஜய் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2019-05-16 15:11 GMT
போபால்,

போபால் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் திக்விஜய் சிங் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது நிருபர்களிடம் கூறியதாவது:-

நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர். அவர் தேச பக்தராக இருந்தார். இருக்கிறார். இருப்பார் என கூறிய பாஜக வேட்பாளர் பிரக்யாசிங் கூறிய கருத்திற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.  

நாதுராம் கோட்சே ஒரு கொலையாளி. அவரை போற்றுவது தேசபக்தியல்ல, தேசதுரோகம் ஆகும். கோட்சே பற்றிய போபால் பாஜக வேட்பாளர் பிரக்யாசிங்கின் கருத்திற்கு பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்