சைதாப்பேட்டை கூட்டுறவு வங்கி தேர்தல் வழக்கு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
சைதாப்பேட்டை கூட்டுறவு வங்கி தேர்தல் வழக்கினை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
புதுடெல்லி,
சைதாப்பேட்டை கூட்டுறவு வங்கிக்கு கடந்த ஆண்டு ஆகஸ்டு 16-ந் தேதி நடைபெற்ற தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக கூறி சென்னையை சேர்ந்த கன்னியப்பன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிகுமார், சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் அமர்வு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதை எதிர்த்து கன்னியப்பன் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி தீபக் குப்தா அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதில் விசாரணை துவங்கியதும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவில் தாங்கள் தலையிட முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.