உத்திரபிரதேசம்: கான்பூர் அருகே பூர்வா எக்ஸ்பிரஸ் தடம்புரண்டது
உத்திரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே பூர்வா எக்ஸ்பிரஸ் தடம்புரண்டது. #Poorva Express #Kanpur
லக்னோ,
உத்திரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள ரூமா கிராமம் பகுதியில் ஹவுரா- புதுடெல்லி நோக்கி செல்லும் விரைவு ரெயிலான பூர்வா எக்ஸ்பிரஸ் இன்று அதிகாலை ஒரு மணி அளவில் தடம் புரண்டது.
12 பெட்டிகள் கொண்ட விரைவு ரெயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டன. தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய ரயில்வே ஹவுரா - 033, 26402241, 26402242, 26402243, 26413660 என்ற முகவரிக்கு ஹெல்ப்லைன் எண்களை வழங்கியுள்ளது.