‘ரபேல் ஆவணங்கள் வெளியானதில் தவறு இல்லை’ ப.சிதம்பரம் கருத்து

ராணுவ அமைச்சகத்தில் இருந்து ரபேல் ஆவணங்கள் திருடப்பட்டு ஆங்கில பத்திரிகையில் வெளியிடப்பட்டதாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்து இருந்தது.

Update: 2019-03-07 20:30 GMT
புதுடெல்லி, 

ராணுவ அமைச்சகத்தில் இருந்து ரபேல் ஆவணங்கள் திருடப்பட்டு ஆங்கில பத்திரிகையில் வெளியிடப்பட்டதாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்து இருந்தது. இது குறித்து முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் நேற்று வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:-

ரபேல் ஒப்பந்த ஆவணங்கள் ஆங்கில பத்திரிகையில் வெளிவந்ததில் தவறு ஏதும் இல்லை. அதை நான் வரவேற்கிறேன். அவை திருடப்பட்ட ஆவணம் என்ற வாதம் அரசியல் சாசன பிரிவு 19-ன் கீழ் காணாமல் போய் விடும்.

வியட்நாம் போர் தொடர்பான பென்டகன் ஆவணங்கள் பத்திரிகைகளில் வெளியானது குறித்து அமெரிக்க கோர்ட்டு 1971-ம் ஆண்டு வெளியிட்ட தீர்ப்பு, ரகசிய ஆவணங்களை பத்திரிகைகள் வெளியிட முடியாது என்ற மத்திய அரசு வக்கீலின் வாதத்துக்கு முழுமையான பதிலாக இருக்கும். அதே சமயம் ரபேல் ஒப்பந்தம் தொடர்பான முழு ஆவணங்களையும் மத்திய அரசு வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்