பயங்கரவாதத்தை வேரறுத்தீர்களா? அல்லது மரத்தின் வேரறுத்தீர்களா? - காங்கிரஸ் சித்து

பயங்கரவாதத்தை வேரறுத்தீர்களா? அல்லது மரத்தின் வேரறுத்தீர்களா? என அரசுக்கு காங்கிரஸ் தலைவர் சித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2019-03-04 11:05 GMT
புல்வாமா தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் எல்லையை தாண்டிய இந்திய விமானப்படையின் அதிரடி தாக்குதலை  வைத்து அரசியல் கட்சிகள் பெரும் அரசியலாக்குகிறது. அரசியலாக்க கூடாது என ஆளும்கட்சி தரப்பிலும், எதிர்க்கட்சிகள் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் இருதரப்பும் ஒவ்வொரு சந்தேகம் மற்றும் குற்றச்சாட்டை வைத்து அரசியல் செய்து வருகிறது. இப்போது பயங்கரவாதிகளின் சாவு எண்ணிக்கை தொடர்பாக இருதரப்பும் ஒவ்வொரு குற்றச்சாட்டை முன்வைக்கிறது.
 
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் மந்திரியாக உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து, “ 300 பயங்கரவாதிகள் உயிரிழப்பு ஆம்? இல்லை?. நோக்கம் என்ன?. நீங்கள் பயங்கரவாதத்தை வேரறுத்தீர்களா? அல்லது மரத்தின் வேரறுத்தீர்களா? இதில் தேர்தல் தந்திரம்? வெளிநாட்டு எதிரிக்கு எதிராக  சண்டையிடுகிறோம் என்ற போர்வை ஏமாற்று செயல். இந்திய ராணுவத்தை வைத்து அரசியல் செய்வதை நிறுத்துங்கள். இதுவே இந்திய தேசத்தை புனிதப்படுத்தும்” என கூறியுள்ளார்.

இந்திய விமானப்படை தாக்குதலில் மரங்கள் அழிந்துள்ளது இது சுற்றுச்சுழலுக்கு எதிரான பயங்கரவாதம் என பாகிஸ்தான் ஐ.நா.வில் புகார் தெரிவித்துள்ளது.

இந்திய விமானப்படையின் தரப்பில், உளவுத்துறை பயங்கரவாதிகளின் நடமாட்டம் தொடர்பாக தகவல் அளித்தது. பயங்கரவாத முகாம்கள் உறுதி செய்யப்பட்டது. பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காத நிலையில் நாங்கள் எடுத்தோம் என கூறப்பட்டது. ஆனால் எத்தனை பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என தெரிவிக்கவில்லை. ஆனால் பா.ஜனதா தலைவர் அமித்ஷா பேசுகையில், 200க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என கூறியுள்ளார். ஏற்கனவே எடியூரப்பா பேசியிருந்தது பெரும் விமர்சனத்தை எழச் செய்தது.

 “பாகிஸ்தானுக்குள் சென்று பயங்கரவாத முகாம்களை அழித்த நடவடிக்கையானது இந்தியாவில் மோடியின் அலையை மீண்டும் கொண்டு வந்துள்ளது. இதனுடைய தாக்கம் வருகிற பாராளுமன்றத் தேர்தலில் தெரியும். கர்நாடகாவில் பா.ஜனதா 22 தொகுதிகளில் வெற்றிப்பெற உதவியாக இருக்கும்” என்று பேசியிருந்தார். பின்னர் தவறாக சித்தரிக்கப்பட்டதாக அவர் மறுப்பு தெரிவித்து இருந்தார். 

மேலும் செய்திகள்