பாகிஸ்தானில் இருந்தபோது மனரீதியாக துன்புறுத்தப்பட்டதாக அபிநந்தன் கூறியதாக தகவல்
பாகிஸ்தான் வசம் இருந்தபோது மனரீதியாக துன்புறுத்தப்பட்டதாக அபிநந்தன் தெரிவித்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுடெல்லி,
பாகிஸ்தான் பிடியிலிருந்து விடுதலை பெற்று டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை, மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் நேரில் சந்தித்து பேசினார். மருத்துவமனையில் சந்தித்த நிர்மலா அபிநந்தனிடம் நலம் விசாரித்தார்.
இந்நிலையில், விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு பாகிஸ்தான் ராணுவப்படையினர் மற்றும் அதிகாரிகள் மனரீதியாக துன்புறுத்தப்பட்டதாக ஏ.என்.ஐ தகவல்கள் தெரிவிக்கின்றன. தம்மை உடல் ரீதியாக பாகிஸ்தான் துன்புறுத்தவில்லை என்றும் அபிநந்தன் தகவல் தெரிவித்தாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் இருந்து நேற்று நாடு திரும்பிய அபிநந்தன் விமானப்படை தளபதியிடம் ஏற்கனவே விளக்கமளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.