ஆந்திராவில் 30 ஆண்டுகளுக்கு முன் கைப்பற்றிய 1,219 துப்பாக்கிகள் அழிப்பு
ஆந்திராவில் 30 ஆண்டுகளுக்கு முன் கைப்பற்றிய 1,219 துப்பாக்கிகளை போலீசார் அழித்தனர்.
ஆந்திராவின் கடப்பாவில் கடந்த 1987ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையான காலகட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 1,219 துப்பாக்கிகளை போலீசார் கைப்பற்றி இருந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட இந்த துப்பாக்கிகளில், சிறிய ரக துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், ரைபிள் ரக துப்பாக்கிகள் உள்ளிட்டவை அடங்கும்.
இவற்றை முறைப்படி ரோலர் கொண்டு போலீசார் அழித்தனர். கைப்பற்றப்பட்ட இந்த துப்பாக்கிகளின் எண்ணிக்கை இதுவரை இல்லாத வகையில் அதிக அளவில் உள்ளது என கூறப்படுகிறது. போலீசாரிடம் ஒப்படைக்காமல் உள்ள துப்பாக்கிகள் சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. துப்பாக்கிகள் அழிப்பு நடவடிக்கைகள் முழுமை அடைந்தபின் இதுபற்றிய அறிக்கை உயரதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.