காஷ்மீரில் பயங்கரவாதிகள் உடனான சண்டையில் 4 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழப்பு

காஷ்மீரில் பயங்கரவாதிகள் உடனான சண்டையில் 4 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

Update: 2019-03-01 13:21 GMT
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குபுவாராவில் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியை சிஆர்பிஎப், ஜம்மு காஷ்மீர் போலீஸ் மேற்கொண்டது. பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த வீடு சிதறியது. சண்டையில் உயிரிழந்ததாக கருதப்பட்ட பயங்கரவாதி ஒருவன், கண்ணிமைக்கும் நேரத்தில் இடிபாடுகளுக்கு இடையே எழுந்து வீரர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்திவிட்டான். உடனடியாக அவன் கொல்லப்பட்டான். அவன் நடத்திய துப்பாக்கி சூட்டில் சிஆர்பிஎப் இன்ஸ்பெக்டர், ராணுவ வீரர் மற்றும் காஷ்மீர் போலீசை சேர்ந்த இரண்டு போலீசார் உயிரிழந்து உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. இச்சண்டையில் பாதுகாப்பு படையினர் 8 பேர் காயம் அடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்