மேற்கு வங்காளத்தில் சிபிஐ அலுவலகங்களில் மத்திய பாதுகாப்பு படையினர் குவிப்பு

மேற்கு வங்காளத்தில் சிபிஐ அலுவலகங்களில் மத்திய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2019-02-04 12:25 GMT
கொல்கத்தா,

கொல்கத்தாவுக்கு விசாரணைக்கு சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள் தடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய அரசுடன் மம்தா பானர்ஜி கடும் மோதலில் ஈடுபட்டு உள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வருகிறார்கள். இந்நிலையில் மேற்கு வங்காளத்தில் மத்திய அரசு நிறுவனங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சிபிஐ அலுவலகங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

அங்கு சிஆர்பிஎப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சாரதா நிதி நிறுவன மோசடியில் அம்மாநில கமிஷனர் ராஜீவ் குமார் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என சிபிஐ சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்