ஆளுநர் கிரண்பேடியின் பணி 3 மாதத்தில் முடிவுக்கு வரும்; முதல் அமைச்சர் நாராயணசாமி
புதுச்சேரி அரசை கேலிக்கூத்தாக்கும் ஆளுநர் கிரண்பேடியின் பணி 3 மாதத்தில் முடிவுக்கு வரும் என முதல் அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி,
புது வருடத்தினை முன்னிட்டு புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், 2019-ம் ஆண்டு பிறந்துள்ள மகிழ்ச்சியான தருணம் இது. மக்களால் துரத்தியடிக்கப்பட்ட கூட்டமொன்று பின்வாசல் வழியே அதிகாரம்பெற்று மக்களை பழிவாங்க நினைக்கும் நிலையில் அதனை தடுத்து நிறுத்தி மக்களை காக்கும் ஆண்டாய் 2019 விளங்கும் என தெரிவித்துள்ளார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களுக்காகவே பணியாற்றும் எங்கள் அரசு புதுச்சேரி மாநிலத்தை வளர்ச்சி பாதையில் முன்னெடுக்க உறுதிபூண்டுள்ளது. இந்த புத்தாண்டிலும் அதற்கான உறுதிமொழியை நாம் அனைவரும் ஏற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து அவர் இன்று, புதுச்சேரி அரசை கேலிக்கூத்தாக்கும் ஆளுநர் கிரண்பேடியின் பணி 3 மாதத்தில் முடிவுக்கு வரும் என கூறியுள்ளார்.