நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல்; முன்னாள் செயலாளர் குற்றவாளி - டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில், முன்னாள் செயலாளர் குற்றவாளி என டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

Update: 2018-11-30 21:15 GMT
புதுடெல்லி,

மேற்குவங்காள மாநிலத்தில் 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விகாஷ் மெட்டல்ஸ் அண்டு பவர் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்துக்கு வடக்கு மற்றும் தெற்கு சுரங்கங்களில் இருந்து நிலக்கரி ஒதுக்கப்பட்டது. இதில் ஊழல் நடந்துள்ளதாக சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

நீதிபதி பாரத் பரஷார் நேற்று இந்த வழக்கில் முன்னாள் நிலக்கரித்துறை செயலாளர் எச்.சி.குப்தா, விகாஷ் மெட்டல்ஸ் நிறுவனம், முன்னாள் இணை செயலாளர் கே.எஸ்.கிரோபா (இவர் இன்னும் பணியில் உள்ளார்), அப்போதைய நிலக்கரித்துறை இயக்குனர் ஆர்.சி.சாம்ரியா ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார். தண்டனை விவரம் 3-ந் தேதி அறிவிக்கப்படும் எனவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் விகாஷ் பத்னி, அங்கீகரிக்கப்பட்ட கையொப்பதாரர் ஆனந்த் மாலிக் ஆகியோருக்கு ஏற்கனவே தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்