குஜராத்தில் 44 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் 44 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
ராஜ்கோட்,
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் பைனான்சியர்கள் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட 44 இடங்களில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. குஜராத் மாநிலத்தில் விஜய் ரூபானி தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.