மராட்டியத்தில் மலைப்பாதை அருகே பஸ் கவிழ்ந்ததில் 5 பேர் பலி

மராட்டியத்தில் மலைப்பாதை அருகே பஸ் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். 27 பேர் காயமடைந்தனர்.

Update: 2024-12-20 10:43 GMT

மும்பை,

மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள லோஹேகானில் இருந்து மஹத்தில் உள்ள பிர்வாடிக்கு ஒரு திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக 32 பேர் பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். இன்று காலை 9.30 மணியளவில் அந்த பஸ் ராய்காட் மாவட்டத்தில் உள்ள தம்ஹினி காட்டின் மலைப்பாதை அருகே சென்றபோது ஒரு வளைவில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் 2 பெண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் 27 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இடிபாடுகளுக்குள் சிக்கி, காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாரிகளின் கூற்றுப்படி, பஸ் ஒரு கூர்மையான வளைவில் கீழ்நோக்கி சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்