ரூ.4.2 லட்சம் கோடி மதிப்பீட்டில் 100 விமான நிலையங்கள் கட்டப்படும்: மத்திய அமைச்சர் தகவல்

ரூ.4.2 லட்சம் கோடி மதிப்பீட்டில் 100 விமான நிலையங்கள் கட்டப்படும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-04 07:24 GMT
புதுடெல்லி,

அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில் 60 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் (ரூ.4.2 லட்சம் கோடி) இந்தியாவில் 100 விமான நிலையங்களை கட்ட திட்டமிட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து துறை மந்திரி சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

 உலக அளவில் இந்தியாவில் விமான போக்குவரத்து  பயன்பாடு மிக வேகமாக அதிகரித்து வருவதாக தெரிவித்த சுரேஷ் பிரபு, கடந்த 50 மாதங்களில் விமானத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். 

மேலும், அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில் அமைக்கப்பட உள்ள 100 புதிய விமான நிலையங்கள், தனியார் நிறுவனங்களுடன் கூட்டு அமைத்து கட்டப்படும் என்றார். குளோபல் ஏர்லைன்ஸ் குழுவான  IATA தகவலின் படி, அடுத்த 10 ஆண்டுகளில், ஜப்பான், ஸ்பெயின், மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளை பின்னுக்கு தள்ளி , இந்தியா உலகின் மூன்றாவது விமான பயணிச்சந்தையாக உருவெடுக்கும் என கூறுகிறது. 

மேலும் செய்திகள்