அமராவதி இன்பமான, மிகவும் வாழத்தக்க நகரம் - சந்திரபாபுநாயுடு

தங்களது புதிய தலைநகரம் பற்றி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பெருமிதமாக கருத்து தெரிவித்துள்ளார்.

Update: 2017-07-16 12:31 GMT
அமராவதி

கிருஷ்ணா நதிக்கரையில் அமையவிருக்கும் புதிய ஆந்திர மாநில தலைநகரான அமராவதியினை நிர்மாணிக்கும் பணிகள் குறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறுகையில், “ விவசாயிகளும், மக்களும் மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளார்கள் 32,500 ஏக்கர் நிலத்தை தனித்ததொரு வகையில் அளித்துள்ளனர். அவர்களின் நம்பிக்கையை ஒட்டி ஆந்திர அரசின் இயந்திரம் இந்நகரத்தை மகிழ்ச்சியுடையாதாக அமைக்க முயற்சிக்கிறது. இந்நகரம் தூய்மையாகவும், பசுமையாகவும் இருக்கும்” என்றார். நிறைய நீர் நிலைகளை கொண்டிருக்கும் என்பதால் அமராவதியின் தட்பவெப்பம் சீராக இருக்கும் என்றார் நாயுடு.

“எங்களது 13 தீவுகளில் ஏழை மேம்படுத்தப் போகிறோம்... புதிய தலைநகரில் தலைக்கு மேல் தொங்கும் மின்சார கம்பிகள் இருக்காது, மொபைல் டவர்கள் இருக்காது, எங்கும் பசுமை நிறைந்திருக்கும், வாழும் அனைத்துக் குடும்பங்களுக்கும் நன்கு கவனித்துக்கொள்ளப்படுவர்” என்றார் முதல்வர்.

அமராவதி நிர்மாணத்தின் முதன்மை செயலரான அஜய் ஜெயின், “ அமராவதி இன்ப நகரமாக விளங்க திட்டமிடப்படுகிறது. முப்பது விழுக்காட்டு நிலத்தில் தண்ணீர் மேலாதிக்கம் செலுத்தும்படி இருக்கும். சூழல் மாசு உருவாக்காத பொதுப் போக்குவரத்தையே நாங்கள் திட்டமிடுகிறோம். வைஃப் பை 100 சதவீதம் இருக்கும். வீடுகள் வசதியாகவும், நியாயமான விலையிலும் இருக்கும்.  நகரப் போக்குவரத்து ஒவ்வொரு இரண்டு கி.மீக்கும் இடையில் இருக்கும். ஒவ்வொரு கட்டடமும் மறுசுழற்சிவளம் மூலம் 50 சதவீத மின் ஆற்றலை பெறும். 

உலகம் முழுவதிலிருந்தும் முன்னணி நிறுவனங்கள் இந்நகரை உருவாக்குவதில் பங்களிப்பு செய்யவுள்ளன. பல கல்வி, மருத்துவ நிறுவனங்களும் பெரும்பொருட்செலவில் அமைக்கப்படவுள்ளன. 

மேலும் செய்திகள்