உத்தர பிரதேசத்தில் ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி ஓடும் வெள்ளம்
உத்தரப்பிரதேசத்தில் காக்ரா மற்றும் ஷார்தா உள்ளிட்டஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் ஓடிக் கொண்டிருக்கிறது.
லக்னோ,
உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் காக்ரா மற்றும் ஷார்தா உள்ளிட்ட ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் ஓடிக் கொண்டிருக்கிறது.
கார்கா ஆற்றில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டிச் செல்வதால், நாக்ரா, காசிப்பூர், காரா சிங்னா உள்ளிட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் மாநிலத்தில் பிந்தா 75 மி.மீ, அயோத்யா 55 மி.மீ, பான்சி 41.4 மி.மீ மழையும் பதிவாகி உள்ளது. உத்தரப் பிரதேசத்தின் மேற்கு மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்து நீர்வளத்துறை செயலாளர் சுரேஷ் சந்திரா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.