கைலாய யாத்திரைக்கு மாற்று வழிகளை பயன்படுத்தலாம் - சீனா
கைலாய-மானசரோவர் யாத்திரைக்கு மாற்று வழிகளை பயன்படுத்தலாம் என்று சீனா தெரிவித்துள்ளது.
புதுடெல்லி
சிக்கிம் மாநிலத்திலுள்ள நாது லா வழி நிரந்தரமாக மூடப்பட்டதாக சீனா கூறியுள்ளது. இனி லிபுலேகு பாதை அல்லது லாசா மற்றும் புராங் பாதையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சீனா கூறியுள்ளது.
“சீனா இந்திய மக்கள் இடையேயான முக்கிய கலாச்சார பரிமாற்றம் கைலாய யாத்திரை. இரு தரப்பும் மொத்தம் 350 யாத்திரீகளை 7 குழுக்களாக பயணிக்க அனுமதிக்க ஒப்புக்கொண்டது. இந்நிலையில் இந்திய துருப்புகள் சீனப்பகுதிக்குள் நுழைந்து சாலை அமைக்கும் பணிகளை தடுக்கின்றன. இந்தியத் துருப்புகள் அந்த இடத்தை விட்டு நகராமல் மேற்கொண்டு பேச்சுக்களை நடத்த இடமில்லை” என்று சீன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சீனாவின் ஸீசாங் அதிகாரிகளின் கூற்றுப்படி சீனா 1,000 அதிகாரபூர்வ யாத்திரிகர்களையும், 10,000 யாத்திரிகர்களையும் அனுமதித்துள்ளது. இதை அனைத்துத் தரப்பாரும், இந்திய அரசு உட்பட பாராட்டி உள்ளனர் என்று சீன தூதரகம் கூறியுள்ளது.