ரெயில் ஏ.சி. வகுப்புகளில் 5% ஜிஎஸ்டி ரயில்வே அமைச்சகம் தகவல்

ரெயில் ஏ.சி. வகுப்புகளில் 5% ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Update: 2017-07-01 17:03 GMT
புதுடெல்லி,

இது தொடர்பாக ரெயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

ரெயிலில் ஏ.சி. வகுப்புகளில் பயணம் செய்ய மொத்த கட்டணத்தில் 5% ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். ஏற்கனவே 4.5% சேவை வரி வசூலிக்கப்பட்ட நிலையில் 0.5% மட்டுமே கூடுதலாக வசூலிக்கப்படும். இந்த புதிய வரி இன்று முதல் பதிவான டிக்கெட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும். முன்கூட்டியே பதிவு செய்த பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்