இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 20,139 ஆக உயர்வு

இந்தியாவில் ஒரே நாளில் 20 ஆயிரத்து 139 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

Update: 2022-07-14 03:47 GMT

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.  

இந்த நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 20,139 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. நேற்று முன் தினம் 13,615 நேற்று 16,906 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 20,139 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,36,69,850 லிருந்து 4,36,89,989 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 16,482 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதன் மூலம் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,30,11,874 லிருந்து 4,30,28,356 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 38 பேர் பலியாகினர். இதுவரை 5,25,557 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,32,457 லிருந்து 1,36,076 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 199.27 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 13,44,714 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்