அக்னி-5 ஏவுகணையின் எடை 20 சதவீதம் குறைப்பு - 7 ஆயிரம் கி.மீ. கடந்து இலக்கை தாக்கும் என தகவல்

அக்னி-5 ஏவுகணை மூலம் 7 ஆயிரம் கி.மீ. கடந்து இலக்கை தாக்க முடியும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Update: 2022-12-17 14:01 GMT

Image Courtesy: PTI

https://www.dailythanthi.com/News/India/india-successfully-tests-agni-v-missiles-858355?infinitescroll=1

புதுடெல்லி,

ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோர் கடற்கரை பகுதியை ஒட்டியுள்ள அப்துல் கலாம் தீவில் இருந்து கடந்த 15-ந்தேதி 'அக்னி–5' ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணை சுமார் 5,400 கி.மீ. தூரம் கடந்து இலக்கை தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அக்னி-5 ஏவுகணையின் எடையை குறைக்கும் வகையில் அதன் இரும்பு பகுதிகளை மாற்றம் செய்து கலவை உலோகத்தால் ஆன பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக டி.ஆர்.டி.ஓ. கூறியுள்ளது. இதன் மூலம் அக்னி-5 ஏவுகணையின் எடை 20 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எடைக்குறைப்பின் மூலம் ஏவுகணை இலக்கை சென்று தாக்கும் தூரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி அக்னி-5 ஏவுகணை மூலம் 7 ஆயிரம் கி.மீ. கடந்து இலக்கை தாக்க முடியும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்பு உருவாக்கப்பட்ட 40 டன் எடை கொண்ட அக்னி-3 ஏவுகணை 3 ஆயிரம் கி.மீ. தூரம் கடந்து தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அக்னி-4 ஏவுகணையின் எடை சுமார் 20 டன் வரை குறைக்கப்பட்ட பிறகு அதன் தாக்குதல் தூரமும் அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்