ராஜஸ்தானில் வெளுத்து வாங்கிய மழை: 20 பேர் உயிரிழப்பு

ராஜஸ்தானில் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ஆகியவற்றால் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

Update: 2024-08-12 03:00 GMT

ஜெய்பூர்,

ராஜஸ்தான் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக ஜெய்ப்பூர், கரவுலி, சவாய் மாதோபூர் உள்ளிட்ட இடங்களில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஜெய்ப்பூரில் நிரம்பி வழியும் கனோடா அணை நீரில் மூழ்கி, 5 இளைஞர்கள் உயிரிழந்தனர். உடல்களை தேடும் பணி நடந்து வருகிறது. பாரத்பூரில் ஸ்ரீநகர் கிராமம் அருகே உள்ள ஆற்றில் மூழ்கி, ஏழு சிறுவர்கள் உயிரிழந்தனர். ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், மோட்டார் சைக்கிளுடன் அடித்துச் செல்லப்பட்டதில் இரு இளைஞர்கள் இறந்தனர். மழை காரணமாக, இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

பேரிடர் மேலாண்மை நிலைமையை மறுஆய்வு செய்வதற்காக, முதல் மந்திரி பஜன் லால் சர்மா தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில மக்கள் அனைவரும், நீர்நிலைகளுக்கு அருகில் செல்லாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பேரிடர் மேலாண்மைத் துறையினர் வழங்கும் அறிவுரைகளை மக்கள் பின்பற்ற வேண்டும்' என முதல் மந்திரி பஜன் லால் சர்மா அறிவுறுத்தியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்