ஏரியில் மூழ்கி 2 வாலிபர்கள் சாவு

குண்டலுபேட்டையில் ஏரியில் மூழ்கி மூழ்கி 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2023-02-21 14:45 GMT

கொள்ளேகால், 

சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா தெரக்கனாம்பி கிராமத்தை சேர்ந்தவர்கள் வினோத் (வயது 24), கார்த்திக் (30). இவர்கள் 2 பேரும் தங்களின் நண்பர்களுடன் அந்தப்பகுதியில் உள்ள ஏரிக்கு குளிக்க சென்றனர். அப்போது அவர்கள் ஏரியில் போட்டி போட்டு குளித்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில், வினோத்தும், கார்த்திக்கும் ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றபோது, திடீரென்று நீச்சல் அடிக்க முடியாமல் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக நண்பர்கள், அவர்கள் 2 பேரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனாலும் அதற்குள் அவர்கள் 2 பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுபற்றி அறிந்ததும் தெரக்கனாம்பி போலீசாரும், தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு படையினர் 2 பேரின் உடல்களையும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்களின் உடல் இதுவரை கிடைக்கவில்லை. இதுகுறித்து தெரக்கனாம்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்