உத்தரப்பிரதேசத்தில் லாரி மோதியதில் இரண்டு சிறுமிகள் உயிரிழப்பு

உத்தரப்பிரதேசத்தில் லாரி மோதியதில் இரண்டு சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2022-10-05 02:07 GMT

தியோரியா,

உத்தரப்பிரதேசத்தில் நேற்று இரவு லாரி மோதி இரண்டு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டிரைவரை கைது செய்த போலீசார், லாரியை பறிமுதல் செய்தனர்.

தசரா திருவிழாவிற்கு கோட்வாலி சந்திப்பில் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். இந்த நிலையில், மொஹல்லா கருல்பர் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி கோட்வாலி சந்திப்பு அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்து திரிஷா யாதவ் (வயது 3), சாக்‌ஷி (வயது 13) என்ற சிறுமிகள் மீது மோதியது. இதில் சிறுமிகள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் காயமடைந்த மற்றொரு சிறுமி மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார், இந்த விபத்தில் சுமார் 12 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்ததாகவும் மேலும் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்களை போலீசார் சமாதானப்படுத்தினர். மேலும் சட்டப்படி போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாக எஸ்.பி சங்கல்ப் சர்மா தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்