உ.பி: நட்சத்திர ஓட்டலில் தீ விபத்து.. சிகிச்சை பெற்றுவந்த இருவர் உயிரிழப்பு !

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

Update: 2022-09-05 11:11 GMT

லக்னோ,

உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி முழுவதும் கடும் புகைமூட்டம் ஏற்பட்டது. ஓட்டலில் பலர் சிக்கி உள்ளதாக தகவல் வெளியானது.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஓட்டலின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து சிக்கியிருப்பவர்களை மீட்டனர்.

இதில், காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ்கள் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.அவர்களில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்த துணை முதல் மந்திரி பிரஜேஷ் பதக், சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

 

Tags:    

மேலும் செய்திகள்