லடாக்கில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ரிசர்வ் பொறியாளர் படையின் டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து: 2 பேர் உயிரிழப்பு!
இந்த விபத்தில், 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்,10 பேர் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லடாக்,
லடாக்கில் சாலை அமைப்பதற்கான அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது சென்று கொண்டிருந்த பொது ரிசர்வ் பொறியாளர் படையினரின் டிப்பர் லாரி ஒன்று, நேற்று கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
லடாக்கின் சசோமா-சசர் லா பகுதியில் தொழிலாளர்கள் சிலர் டிப்பர் லாரியில் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில், இரு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் 10 பேர் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களுக்கு பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். லடாக்கின் சசோமா-சசர் லா பகுதியில் விபத்தால் விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோனது மிகுந்த வேதனை அளிக்கிறதுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாகவும் கூறினார்.
லடாக்கில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த இரண்டாவது சாலை விபத்து இதுவாகும். முன்னதாக, நேற்று கார்துங்லா உச்சியில் பனியில் வழுக்கி சுற்றுலா பயணிகளின் ஜீப் பள்ளத்தாக்கில் விழுந்தது. இதில் டெல்லியைச் சேர்ந்த 3 சுற்றுலாப் பயணிகள் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 4 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர்.