ஏடிஎம் பாஸ்வேர்டை பயன்படுத்தி, ரூ.19 லட்சம் கொள்ளை: ஏடிஎம் பாதுகாவலர் அதிரடி கைது

ஏடிஎம் மையத்தில் இருந்த சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்தபோது, அதில் பாதுகாவலரே திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.;

Update:2022-11-29 21:50 IST

பெங்களூரு,

கர்நாடக தலைநகர் பெங்களூருவில், ஏடிஎம் இயந்திரத்தின் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி, 19 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த பாதுகாவலரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த 17ம் தேதி, பெங்களூர் வில்சன் கார்டன் பகுதியில் உள்ள வங்கி ஏடிஎம்மில் இருந்து பணம் கொள்ளை போயிருந்தது. இதுதொடர்பான புகாரின் பேரில், ஏடிஎம் மையத்தில் இருந்த சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்தபோது, அதில் பாதுகாவலரே திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து, செல்போன் சிக்னலை வைத்து கவுகாதியில் பதுங்கியிருந்த நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடர்பான விசாரணையில், ஏடிஎம்மில் பணம் நிரப்ப வரும் ஊழியர்களுக்கு தெரியாமல் செல்போனை மறைமுகமாக வைத்து, ஏடிஎம் இயந்திரத்தை திறப்பதற்கான கடவுச்சொல்லை கண்டறிந்து, இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

 

Tags:    

மேலும் செய்திகள்