தெலுங்கானாவில் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறாததால் தீக்குளித்து மாணவர் தற்கொலை

தெலுங்கானாவில் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறாததால் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;

Update:2023-05-26 00:28 IST

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலத்தில் பொறியியல், விவசாயம் மற்றும் மருத்துவ பொது நுழைவுத் தேர்வு (TS-EAMCET) முடிவுகள் வியாழக்கிழமை வெளியாகின. இந்த நிலையில் இந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறாததால் 18 வயது மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக வியாழக்கிழமை இன்டர்மீடியட் படித்த மாணவர் ஒருவர் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறாததால் உஸ்மானியா பல்கலைக்கழக வளாகத்தில் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இதையடுத்து தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அந்த மாணவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்