மத்திய பிரதேசத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து: 23 பேர் பலி; 25 பேர் காயம்
மத்திய பிரதேசத்தில் பாலத்தில் சென்ற பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
போபால்,
மத்திய பிரதேசத்தில் கார்கோனில் உள்ள பாலத்தில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் உயிரிழந்தனர். பாலத்தில் இருந்து பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்த 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பஸ் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டுள்ளார். மேலும் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.25,000 நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.