இந்தியாவில் 138 சூதாட்ட செயலிகளுக்கு தடை - மத்திய அரசு
சீனாவுடன் தொடர்புடைய 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் வழங்கும் செயலிகளை தடை செய்யும் பணியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
புதுடெல்லி,
சீனாவுடன் தொடர்புடைய 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் வழங்கும் செயலிகளை தடை செய்யும் பணியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தால் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
சீனாவின் 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் வழங்கும் செயலிகளை அவசர நிலை அடிப்படையில் தடைசெய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கும் பணிகளை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் துவக்கியுள்ளது.
மத்திய அரசு ஆறு மாதங்களுக்கு முன்பு 288 சீன செயலிகளை ஆய்வு செய்யத் தொடங்கியது. இந்த ஆய்வில் இந்திய மக்களின் தனிப்பட்ட தரவுகளை சீன செயலிகள் எடுத்து இருக்கலாம் என தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் சீனாவுடன் தொடர்புடைய 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் வழங்கும் செயலிகளை முடக்கவும், தடை செய்யவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.