குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து சிறுமி பாலியல் வன்கொடுமை: சிறுவன் உட்பட 3 பேர் கைது
சத்தீஸ்கரில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிறுவன் உட்பட 3 பேரை போலீசார் கைதுசெய்தனர்.
பஸ்தார்,
சத்தீஸ்கரில் உள்ள பஸ்தாரில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை: செய்த வழக்கில் சிறுவன் உட்பட 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த ஜனவரி 11 மற்றும் 12 ஆம் தேதிகளின் இடைப்பட்ட இரவில் சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை: செய்யப்பட்டதாக அதிகாரி தெரிவித்தார்.
பின்னர் இதுகுறித்து ஜனவரி 13 அன்று போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், சிறுவன் உட்பட 3 பேரை போலீசார் கைதுசெய்தனர். சிறுவன் சிறார் சீர்திருத்த இல்லத்திற்கு அனுப்பப்பட்ட நிலையில், எஞ்சிய இருவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.