திருப்பதி அருகே செம்மரம் வெட்டிய 13 பேர் கைது: வாகனங்கள் பறிமுதல்

திருப்பதி அருகே சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்டிய 13 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2023-04-23 23:10 GMT

திருமலை,

திருப்பதி மாவட்டம் பாக்ராப்பேட்டை மேற்கு துணைப்பிரிவு சேஷாசலம் வனப்பகுதியில் போடவான்ட்லப்பள்ளி, சாய்கடகுட்டா பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகில் போலீசார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு கும்பல் செம்மரங்களை ெவட்டி தோளில் தூக்கி வந்தனர். அந்தக் கும்பலை போலீசார் சுற்றி வளைத்தனர். அதில் 2 பேர் தப்பியோடி விட்டனர். 13 பேரை போலீசார் ைகது செய்தனர்.

அந்தக் கும்பல் பலமுறை சேஷாசலம் வனப்பகுதிக்கு வந்து ெசம்மரங்களை வெட்டி கடத்தியிருப்பது தெரிய வந்தது. அவர்களில் ஒருவர் ஆந்திர மாநிலம் ராயச்சோட்டி அன்னமய்யா மாவட்டத்தைச் சேர்ந்தவர், 2 பேர் திருப்பதி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். மற்ற அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்தது.

வாகனங்கள் பறிமுதல்

ைகதானவர்களில் குண்டல சங்கர் என்பவரை போலீசார் அடையாளம் கண்டனர். அவர் மீது செம்மரக்கடத்தல் தொடர்பாக 30 வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனினும், அவர் தொடர்ந்து செம்மரக்கடத்தலில் ஈடுபட்டு வருகிறார். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், எனப் போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வர்ரெட்டி தெரிவித்தார்.

கைதானவர்களிடம் இருந்து ரூ.71 லட்சம் செம்மரக்கட்டைகள், ஒரு கார், 6 மோட்டார்சைக்கிள்கள் ஆகியவற்றை போலீசாா் பறிமுதல் செய்தனர். அவர்கள் மீது பாக்ராப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ்வர்லு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்