சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள் தாக்குதலில் 11 போலீசார் உயிரிழப்பு: பிரதமர் மோடி கண்டனம்

சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடாவில் காவல்துறை மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Update: 2023-04-26 12:18 GMT

புதுடெல்லி,

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 10 காவலர்கள் உட்பட 11 வீரர்கள் வீர மரணம் அடைந்த சம்பவம் நாட்டில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தண்டேவாடா மாவட்டத்தின் அரண்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், மாவோயிஸ்ட்டுகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சோதனை நடத்திவிட்டு வாகனத்தில் திரும்பிய போது, மாவோயிஸ்ட்டுகள் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டுகள் வெடித்து டி.ஆர்.ஜி. ரிசர்வ் படையை சேர்த்த 11 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து, வீர மரணம் அடைந்து வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடாவில் நடந்த மாவோயிஸ்ட்டுகள் தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். கடினமான சூழலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாகவும் தாக்குதலில் உயிர்நீத்த துணிச்சலான வீரர்களுக்கு அஞ்சலி என்றும் அவர்களின் தியாகம் என்றும் நினைவுகூரப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்