2 ஆண்டுகளில் சைபர் கிரைம் மூலம் 10,300 கோடி ரூபாய் வரை மோசடி...!

சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

Update: 2024-01-04 03:57 GMT

டெல்லி, 

சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றன. பொதுமக்களை செல்போன்கள் மூலமாக தொடர்பு கொள்ளும் மர்மநபர்கள் வேலை வாங்கி கொடுப்பதாகவும், பரிசு கிடைத்திருப்பதாகவும், மின் கட்டணம் செலுத்தும்படியும், வங்கி கணக்குகளை புதுப்பிக்கும்படி என புது புதுவிதமாக ஏமாற்றி மோசடி செய்து வருகிறார்கள்.

இந்தநிலையில் இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் தற்போது வரை சுமார் 10,300 கோடி ரூபாயை சைபர் கிரைம் குற்றவாளிகள் மோசடி செய்துள்ளனர் என்று தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் 1,127 கோடி ரூபாய் வரையிலான பணம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தலைமை செயல் அதிகாரி ராஜேஷ் குமார் கூறியதாவது: 'தற்போது வரை பாதிக்கப்பட்ட மக்கள் சுமார் 5 ஆயிரம் புகார்களை தேசிய சைபர் கிரைம் போர்டலில் பதிவு செய்துள்ளனர். இதில் 50 சதவீதம் அளவிலான மோசடிகளை சீனா, கம்போடியா,மியான்மர் ஆகிய நாடுகளை சேர்ந்த சைபர் கிரைம் கும்பல்கள் செய்துள்ளனர். மேலும் சீனாவில் உருவாக்கப்பட்ட செயலிகள் மூலம் அதிகளவில் மோசடி நிகழ்ந்துள்ளன' என்று கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்