ஒடிசாவில் 1,010 கிலோ போதை பொருள் பறிமுதல்

ஒடிசாவில் 1,010 கிலோ போதை பொருளை சிறப்பு அதிரடி படையினர் இன்று பறிமுதல் செய்துள்ளனர்.

Update: 2022-06-04 16:40 GMT



புவனேஸ்வர்,



ஒடிசாவின் தலைநகர் புவனேஸ்வரில் தமண்டோ என்ற பகுதியருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்றை வழிமறித்து சிறப்பு அதிரடி படையினர் இன்று சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் பல மூட்டைகளில் கஞ்சா என்ற போதை பொருளை மறைத்து வைத்து கடத்தப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

போலீசாரின் சோதனையின்போது தெரிய கூடாது என்பதற்காக வாகனத்தின் ரகசிய அறைவில் போதை பொருட்களை பதுக்கி வைத்து, இந்த கடத்தலில் ஈடுபட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் ராஜேஷ் சிங் என்பவரை கைது செய்துள்ளனர்.

பீகாரை சேர்ந்த அந்த நபரிடம் இந்த பொருட்களை கொண்டு செல்வதற்கான அனுமதிக்கப்பட்ட ஆவணங்கள் எதுவும் இல்லை. இதனை தொடர்ந்து வழக்கு ஒன்றை பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்