சிலம்பாட்ட போட்டிக்கு மாணவி தேர்வு

மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டிக்கு மாணவி தேர்வு செய்யப்பட்டார்.

Update: 2022-04-18 17:01 GMT
பரமக்குடி, 
யூத் ரெட் கிராஸ், ஜூனியர் ரெட் கிராஸ் மற்றும் ஸ்ராமல் அகாடமி ஆகியவை இணைந்து ராமநாதபுரத்தில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டிகள் நடத்தின. இதில் 12 வயதுக்கு உட்பட்ட பிரிவில் பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி தாரணி மாவட்ட அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். இந்த மாணவி அடுத்த மாதம் தூத்துக்குடியில் நடைபெற உள்ள மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டிக்கு செல்ல தகுதி பெற்றுள்ளார். அந்த மாணவியையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்களையும், கீழ முஸ்லிம் ஜமாத் தலைவர் ரபி அகமது, செயலாளர் கமருல் ஜமாலுதீன், பொருளாளர் முகம்மது உமர், பள்ளியின் தலைமை ஆசிரியர் அஜ்மல்கான், உதவி தலைமை ஆசிரியர் புரோஸ்கான் உள்பட ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்