மீனவர்கள் வலையில் சிக்கும் கடல் சாரை பாம்புகள்

அதிராம்பட்டினம் கடல் பகுதியில் மீனவர்கள் வலையில் கடல் சாரை பாம்புகள் சிக்குகின்றன.

Update: 2021-10-04 20:00 GMT
அதிராம்பட்டினம்:
அதிராம்பட்டினம் கடல் பகுதியில் மீனவர்கள் வலையில் கடல் சாரை பாம்புகள் சிக்குகின்றன. 
கடல் சாரை பாம்புகள் 
அதிராம்பட்டினம் கடற்பகுதியில் கடலுக்கு சென்று மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு கடல் சாரை பாம்பு என்றால் ஒரு வித பயம் இருக்கத்தான் செய்கிறது. கடல் சாரை பாம்பு என்பது தரையில் வாழும் விஷப்பாம்புகளை விட இரண்டு மடங்கு விஷம் அதிகம் உள்ள கடல் பாம்பு ஆகும். இந்த பாம்பு ஆழ்கடலில் வாழக்கூடியது. இந்த கடல் சாரை பாம்புகள் 6 அடி நீளம் உள்ளது. தரையில் வாழும் பாம்புக்கும், கடல் சாரை பாம்புக்கும் உள்ள வித்தியாசம்.  தரையில் வாழும் பாம்பு கொத்தும் என்றால் கடல்சாரை பாம்பு கடிக்கும். பிழைப்புக்காக கடலுக்கு சென்று மீன்பிடிக்கும் மீனவர்கள் வலையில் அதிக அளவில் மீன்களுக்கு பதிலாக கடல் சாரை பாம்புகள் சிக்கி வருகின்றன. இதனால் மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 
ஆயுதம் வைக்க வேண்டும் 
இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில்,
சமீப காலமாக மீனவர்கள் வலையில் அதிகம் கடல் சாரை பாம்புகள் சிக்குகின்றன. இந்த சாரை பாம்புகள் கடித்து நிறைய பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதனால் நாங்கள் வலையை பிரிக்கையில் பாதுகாப்பாக ஆயுதம் வைத்துக்கொள்ள வேண்டி உள்ளது. ஆயுதம் வைத்திருந்தாலும் அச்சத்துடன் தான் கையாள வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்