சிறை கைதிகளுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி

பாளையங்கோட்டை சிறை கைதிகளுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி வகுப்பு நடந்தது.

Update: 2021-10-03 19:50 GMT
நெல்லை:
பாளையங்கோட்டை சிறையில் உள்ள கைதிகளுக்கு தண்டனை காலம் முடிந்து விடுதலையான பின்பு அவர்களது வாழ்வாதாரம் சிறப்பாக அமைந்திட அவர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி வழங்க வேண்டும் என்று சிறைத்துறை டி.ஐ.ஜி.பழனி தலைமையில் காந்தி ஜெயந்தி அன்று பாளையங்கோட்டை சிறையில் வைத்து வேலைவாய்ப்பு பயிற்சி மற்றும் ஆலோசனை முகாம் நடந்தது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிராமிய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குனர் சோமசுந்தரம், கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி பேராசிரியர் ரவி, நெல்லை கால்நடை உதவி இயக்குனர் கலையரசி, நெல்லை அரசு கேபிள் டிவி தாசில்தார் ஆதிநாராயணன், வருவாய் ஆய்வாளர் லிங்கம் ஆகியோர் பயிற்சி வகுப்பை நடத்தினார்கள். இதில் ஏராளமான கைதிகள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜெயில் சூப்பிரண்டு சங்கர் பரிசு வழங்கினார்.

மேலும் செய்திகள்