திடக்கழிவு உரங்களை பயன்படுத்துவது குறித்து கண்காட்சி

வால்பாறையில் திடக்கழிவு உரங்களை பயன்படுத்துவது குறித்த கண்காட்சி நடைபெற்றது.

Update: 2021-10-02 16:13 GMT
வால்பாறை

வால்பாறையில் திடக்கழிவு உரங்களை பயன்படுத்துவது குறித்த கண்காட்சி நடைபெற்றது. 

கண்காட்சி

வால்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டம், தூய்மை பாரதம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு நாளும் நகராட்சியின் துப்புரவு பணியாளர்கள் பொது மக்கள் குடியிருப்புகளுக்கு நேரில் சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம்பிரித்து சேகரித்து வருகின்றனர். இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகளை கொண்டு உரம் தாயாரிப்பதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் திடக்கழிவு உரங்களை பயன்படுத்துவது குறித்த கண்காட்சி நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். நகராட்சி துப்புரவு அதிகாரி செல்வராஜ் கலந்துகொண்டு பேசினார்.

காய்கறிகள், பூஞ்செடிகள்

 இதில், குப்பைகளை கொண்டு உரம் தயாரித்தால் அந்த உரங்களை பயன்படுத்தி காய்கறிகள், பூஞ்செடிகளை விளைவிக்கலாம் என்று வால்பாறை மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் தூய்மை பாரத திட்டத்தின் மூலம் பொது இடங்களில் மலம் கழிப்பதை தடுப்பது, பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவதை தவிர்ப்பது போன்றவற்றை பொது மக்கள் கடைபிடிக்க செய்வதில் மகளிர் சுய உதவிக்குழு பெண்களின் பங்களிப்பு அதிகம் இருக்க வேண்டும் என்பதையும் இந்த காண்காட்சி மூலம் எடுத்துக் கூறப்பட்டது. இதில் துப்புரவு ஊழியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்