பெண்ணின் காதை அறுத்து நகை கொள்ளை... சிவகங்கையில் அதிர்ச்சி சம்பவம்

சிவகங்கையில் பெண்ணின் காதை அறுத்து அவர் அணிந்திருந்த நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-10-18 01:03 GMT

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் ஒடுவான்பட்டியைச் சேர்ந்த தம்பதி சின்னையா-சரசு. இவர்கள் இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் சின்னையாவைக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். பின்னர் சுரசுவின் இரு காதையும் அறுத்து அவர் அணிந்திருந்த கம்மலைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்த போலீசார் சரசுவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக கடந்த ஜனவரி மாதம் சின்னையா-சரசு வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் தம்பதி இருவரையும் கட்டி போட்டு தாக்கி, 10 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அப்போது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மீண்டும் 10 மாத இடைவெளியில் சின்னையா-சரசு வீட்டில் புகுந்த கும்பல் சரசுவின் காதை அறுத்து கம்மலை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Full View

Tags:    

மேலும் செய்திகள்