டெல்லி: ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு
ரசாயன கிடங்கில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
புதுடெல்லி,
டெல்லியில் உள்ள கைலாஷ்புரி பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ரசாயன கிடங்கு செயல்பட்டு வருகிறது. இந்த கிடங்கில் நேற்று இரவு 11 மணியளவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சுமார் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு, தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. தீ விபத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்தும், தீ விபத்திற்கான காரணம் குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.