உத்தர பிரதேச சாலை விபத்தில் இருவர் பலி

இந்த விபத்தை ஏற்படுத்திய அடையாளம் தெரியாத கார் டிரைவரை போலீசார் தேடிவருகின்றனர்.

Update: 2024-12-16 04:49 GMT

லக்னோ

உத்தர பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் டெல்லி- சஹாரன்பூர் நெடுஞ்சாலையில் வேகமாக வந்த கார் மோதியதில் பைக்கில் சென்ற இருவர் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த இருவரையும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். சோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவித்தனர். பின்னர் இறந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் உயிரிழந்தவர்கள் அனுஜ் (வயது 25) மற்றும் அவரது உறவினர் பவ்னிஷ் (32) என தெரியவந்துள்ளது. மேலும் நேற்று மாலை பாக்பாட்டிலிருந்து ஷாம்லி மாவட்டத்தில் உள்ள தங்கள் கிராமமான பாவிசாவுக்குத் திரும்பிய போது இந்த விபத்து நேர்ந்துள்ளது என தெரியவந்துள்ளது. மேலும் இந்த விபத்தை ஏற்படுத்திய அடையாளம் தெரியாத கார் டிரைவரை போலீசார் தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்