உண்ணாவிரதம் இருந்த 11 பேர் கைது

உண்ணாவிரதம் இருந்த 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-10-01 17:52 GMT
காரைக்குடி, 
காரைக்குடி புதிய பஸ் நிலையம் அருகில் தமிழக மக்கள் மன்றத்தின் சார்பில் காரைக்குடியை மாநகராட்சியாக தரம் உயர்த்தக் கோரியும் காரைக்குடியை தலைநகராகக்கொண்டு தனி மாவட்டம் அமைக்க வலியுறுத்தியும், காரைக்குடி புதிய அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவை ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  கவனஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சமூக நல ஆர்வலர் அபுபக்கர் சித்திக் தலைமை தாங்கினார். மக்கள் மன்றத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராசகுமார் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் மக்கள் மன்ற செயலாளர் ஆறுமுகம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், நகர பொறுப்பாளர் அப்பாஸ், திருப்பத்தூர் தொகுதி பொறுப்பாளர் சேதுராமன் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.போராட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதற்காக வடக்கு போலீசார் ராச குமார் உட்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும் செய்திகள்