பாலத்தில் கார்மோதி பெண் பலி 3 பேர் படுகாயம்

திருவாடானை அருகே பாலத்தில் கார்மோதி பெண் பலியானார்.

Update: 2020-06-04 05:14 GMT
திருவாடானை, 

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா புளியால் அருகே உள்ள சக்கந்தி கிராமத்தை சேர்ந்தவர் ரெத்தினம். இவரது மனைவி சீதாலெட்சுமி மற்றும் அவரது உறவினர்கள் சிலர் ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். அதன் பின்னர் ஒரு காரில் சொந்த ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.காரை சக்கந்தி கிராமத்தை சேர்ந்த கோபால் ஓட்டி சென்றுள்ளார். அப்போது திருவாடானை அருகே உள்ள மேல்பனையூர் விலக்கு சாலை அருகே சென்ற போது கார் எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் வேகமாக மோதியது.இதில் காரில் இருந்த சீதாலெட்சுமி உள்பட 4 பேரும் படுகாயமடைந்தனர். சீதாலெட்சுமி,அவரது மகன் அஜீத்குமார் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.செல்லும் வழியில் சீதாலெட்சுமி பரிதாமாக உயிரிழந்தார். அஜீத்குமார் உள்பட 3 பேரும் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

மேலும் செய்திகள்