திருவாரூர் மாவட்டத்தில் 68 நாட்களுக்கு பிறகு பஸ்கள் இயக்கம்

திருவாரூர் மாவட்டத்தில் 68 நாட்களுக்கு பிறகு பஸ்கள் இயக்கப்பட்டன.

Update: 2020-06-01 23:43 GMT
திருவாரூர், 

திருவாரூர் மாவட்டத்தில் 68 நாட்களுக்கு பிறகு பஸ்கள் இயக்கப்பட்டன.

பஸ்கள் இயக்கம்

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது 5-வது கட்டமாக ஊரடங்கு வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

அதன்படி 68 நாட்களுக்கு பிறகு திருவாரூர் மாவட்டத்தில் நேற்று பஸ் போக்குவரத்து தொடங்கியது. திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், நன்னிலம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஆகிய 4 பணிமனைகளில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டன. குறைவான அளவில் பயணிகள் வந்ததால் பஸ் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

மேலும் செய்திகள்