சிதம்பரம் பகுதியில் குறுவை சாகுபடி பணிகளை வேளாண்மை இயக்குனர் ஆய்வு
சிதம்பரம் பகுதியில் குறுவை சாகுபடி பணிகளை வேளாண்மை இயக்குனர் ஆய்வு மெற்கொண்டார்.
அண்ணாமலைநகர்,-
கடலூர் மாவட்டத்தில் பரங்கிப்பேட்டை, மேல்புவனகிரி, கீரப்பாளையம், காட்டுமன்னார்கோவில், குமராட்சி ஆகிய 5 வட்டங்களில் சராசரியாக 39 ஆயிரத்து 520 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி பயிரிடப்பட்டு வருகிறது. இதுவரை 19 ஆயிரத்து 427 ஏக்கர் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சிதம்பரம் பகுதியில் நடந்து வரும் குறுவை சாகுபடி பணிகளை ஆய்வு செய்வதற்காக சென்னை வேளாண்மைத்துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் ஆகியோர் வந்தனர். தொடர்ந்து அவர்கள் சிதம்பரம் பகுதியில் நடைபெறும் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடப்பணியினை ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து சிதம்பரம் அருகே உள்ள கூத்தன்கோவில் பகுதியில் உழவர் உற்பத்தியாளர் குழு மூலம், சமுதாய நாற்றாங்கால் அமைத்து குறுவை சாகுபடி செய்த நடவு வயலை ஆய்வு செய்து விவசாயிகளுடன் கலந்துரையாடல் செய்தனர்.
பின்னர் வையூரில் எந்திர நடவு பணிகளை ஆய்வு செய்து உரிய ஆலோசனை வழங்கப்பட்டது. இதனையடுத்து வல்லம்படுகை பகுதியில் பாய்நாற்றாங்கால் சாகுபடியும் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், சிதம்பரம் சப்-கலெக்டர் விசுமகாஜன், கடலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முருகன், துணை இயக்குனர்கள் வேல்விழி, ரமேஷ், உதவி இயக்குனர் அமிர்தராஜ், வேளாண் அலுவலர் உமாமகேஸ்வரி, உதவி வேளாண் அலுவலர் கயல்விழி, வட்டார தொழில்நுட்ப மேலாளர் கல்பனா, விவசாயிகள் சங்க தலைவர்கள் ரவீந்திரன், வெள்ளூர்பாபு உள்பட பலர் உடன் இருந்தனர்.
இதையடுத்து வேளாண்மைத்துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மேட்டூர் அணையை திறக்க ஆணையிட்டுள்ளதை தொடர்ந்து டெல்டா பாசன விவசாயிகள் குறுவை சாகுபடியினை செம்மையாக செய்திடும் பொருட்டு மாவட்டத்தில் சான்று பெற்ற நெல் விதைகள் குறுகிய ரகங்களான ஆடுதுறை-43, ஆடுதுறை-45, கோ-51, அம்பை-16 போன்ற ரகங்கள் வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் தனியார் விதை விற்பனை நிறுவனங்களில் 106 மெட்ரிக் டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 971 மெட்ரிக் டன் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.
விதை கிராம திட்டத்தில் 50 சதவீத மானியத்தில் விதைகள் வேளாண்மை விரிவாக்க மையங்களால் விநியோகம் செய்யப்படுகிறது. குறுவை சாகுபடிக்கு தேவையான உரங்களான யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ் காம்பளக்ஸ் மற்றும் பாஸ்பேட் உரங்கள் தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் தற்போது 23,333 மெட்ரிக் டன் கையிருப்பில் உள்ளது. டெல்டா வட்டார விவசாயிகளுக்கு தடையற்ற மும்முனை மின்சாரம் 12 மணி நேரம் வழங்கப்பட்டு வருகிறது. குறுவை சாகுபடி செய்திடும் விவசாயிகளுக்கு 16 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.71.21 கோடிக்கு வட்டியில்லா பயிர்க்கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.